Powered by Blogger.

Monday, May 13, 2013

அகந்தையை அகற்றினால் சொர்க்கம் நிச்சயம்

மிகப்பெரிய கோவில் ஒன்றில் பண்டிதர் ஒருவர் பல நாட்கள் புராண உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். படித்தவர்கள், பணக்காரர்கள் பலர் மனைவி மக்களுடன் காரிலும், வண்டிகளிலும் தவறாமல் வந்து புராணம் கேட்டனர்.


ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு புராணம் கேட்க ஆசை. அவன் படிப்பும், இல்லாதவன், சபையில் எல்லாருக்கும் சமமாக உட்காராமல் மூலையில் அமர்ந்து கதை கேட்டான். தினந்தோறும் சொற்பொழிவு நடந்தது.


கடைசி நாளன்று புராண உபன்யாசம் செய்தவர் சபையில் இருந்தவர்களைப் பார்த்து “ இவ்வளவு நாள் புராணம் கேட்டீர்களே ! உங்களில் யார் சொர்க்கத்திற்குப் போகிறீர்கள் ?" என்று கேட்டார். ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது ஆடு மேய்ப்பவன் மட்டும், நான் போனால் போவேன் என்று கூறினான்.


சபை ஆச்சரியப்பட்டது. பெரியவர் விளக்கம் அளிக்குமாறு ஆடுமேய்ப்பவனிடம் கேட்டார். அப்போது “நான்“ என்ற அகந்தை போனால் சொர்க்கம் போகமுடியும் என்றான் அவன்!

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM