Powered by Blogger.

Monday, May 13, 2013

ஒரு கோடி கேட்ட சிவகார்த்திகேயனுக்கு ரூ 2 கோடி தரும் கோடம்பாக்கம்


லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சம்பளம் இப்போது கோடிகளில். போன பிரஸ் மீட் வரை நானா.. ஒரு கோடி சம்பளம் கேட்டேனா… என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர், இப்போது ரூ 2 கோடி சம்பளம் பெறுகிறாராம். சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. அவர் நடித்து அண்மையில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ஆகிய படங்களின் வெற்றிதான் இதற்கெல்லாம் காரணம் என்பது சொல்லாமலே தெரியும் உண்மை. இப்போது அவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரிக்கும் புதிய படத்திலும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்திலும், லிங்குசாமி தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்ந்தமாகியிருக்கிறார்.
இந்த மூன்று படங்களில் நடிக்க சம்பளமாக தலா 2 கோடி ரூபாய் பேசப்பட்டு அட்வான்ஸும் கொடுத்துவிட்டார்களாம். து. மேலும் ‘எதிர் நீச்சல்’ படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், மீண்டும் தனுஷ் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இந்த நான்கு படங்களில் துரை செந்தில்குமார் இயக்கப் போகும் படத்திற்குதான் முதலில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. இந்தப் படத்துக்கும் ரூ 2 கோடி சம்பளமாம். இந்தப் படங்களும் வெற்றி பெற்றால், அடுத்தடுத்த படங்களுக்கு சம்பளம் வேறு ரேஞ்ச் என்கிறது சிவகார்த்திகேயன் தரப்பு.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM