Powered by Blogger.

Monday, May 13, 2013

யுவனின் 100வது பட ஆடியோ விழாவில் இளையராஜா- ஏ.ஆர்.ரகுமான்!


சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்ட அவர், இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பிரியாணி படத்தின் மூலம் 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட

பெருமை பெற்றுள்ளா.
அந்த வகையில் யுவனின் சினிமா கேரியரில் இது முக்கியமான படம் என்பதால், இப்படத்தின் ஆடியோ விழாவை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். முக்கியமாக, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரையும் ஒரே மேடையில் தோன்ற பேசி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இளையராஜாவிடம் கீப்போர்டு பிளேயராக பணியாற்றிய காலகட்டத்தில், அப்போது சிறுவனாக இருந்த யுவன் அவருக்கு நல்ல பரிட்சயம். அதனால் யுவனின் வெற்றியில் ரகுமானும் சந்தோசமடையக்கூடியவர் என்பதால், இந்த விழாவில் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM