Powered by Blogger.

Wednesday, May 29, 2013

மாஸ்மலோ தயாரிக்கும் முறை!!

தேவையான்  பொருட்கள் :
   சீனி               _500 g
   ஜெலற்றின்         _  30g
   தண்ணீர்           _  2  கப்
   கலரிங்            _  தேவைக்கேற்ப‌
   எலுமிச்சம்  பழம்  _  2 தேக்கரண்டி
   கோன்பிளவர்      _  அளவாக‌


செய்முறை :
 * சீனியை  தண்ணீர்  சேர்த்து  பாகு  காச்சவும்.  பாகு  நூல்  பதம்
       ஆனதும்  வேறொரு  பாத்திரத்தில்  ஊற்றி  ஜெலற்றின்  1/4  கப்
       தண்ணீரில்  கரைத்து  பாகுடன்  சேர்த்து  நன்கு  ஆறவிடவும்.
       பின்  முட்டை  அடி  கருவி  or   கேக்  அடி  கருவியினால்  நன்றாக
       அடிக்கவும்.  பின்  நுரையாக  இறுகும்  பருவத்தில்  கலரிங்
       எலுமிச்சம்  பழத்தையும்   சேர்க்கவும்.
  
   * பின்  ஒரு  தட்டில்  கோன்பிளவரை  லேசாக  தூவி  அத்தட்டில்
       கலவையை  ஊற்றி  குளிரூட்டியில்  வைக்கவும்.  or   தண்ணீர் 
       பாத்திரத்தின்  மேல்  வைக்கவும்.


NOTE  அடிகருவி  கலவையில்  இருந்து  எடுக்கும்  போது  கலவை  சிந்தாமல்
   இருப்பதே  மாஸ்மலோ  பதமாகும்.

Blieacing




*Facial ,  Face  Clean  Up   இவை  செய்யும்  முன்பு    Bleaching  ஜ  செய்யவேண்டும்.


*உதடுகள்,  கண்களைச்சுற்றி, இமைப்புருவங்கள்   இவற்றில்    Cream  ஜ  கண்டிப்பாகபடக்கூடாது.  3‍‍‍ __ 4 நிமிடங்கள்  அப்படியே  விடவும்.
[சில   ல்  மேற்படியான   நிமிடங்கள்  குறிபிட்டு  இருக்கலாம்.  அதன்படி   முகத்தில்  விடலாம்.]



Methods  [செய்முறை]  :
       ஒரு  தேக்கரண்டி  கீறிமுடன்  ஒரு  சிட்டிகை   [சிறுதுளி]    Activator    [2  தேக்கரண்டி   கீறிமுக்கு 2   Activator   துளி [சிட்டிகை]  ]  இவை  இரண்டையும்  நன்றாக  கலந்து  2  நிமிடம்  அப்படியே  விடவேண்டும்.  பின்னர்  வேண்டிய   இடங்களில்   முகத்தில்  தடவி  குறிபிட்ட  நிமிடத்தில்  துடைத்து  எடுக்க  வேண்டும். {[3  or  4   நிமிடம்]  or  [குறிபிட்ட  நேரத்தில்]}

NOTE  *  முகம், உடம்புக்கு  என   Bleach  Cream   பிறம்பாக  உண்டு.
               *  அலேஜிங்  ரெஸ்ர்  [Allergy  Test]   எடுக்கவும். [காதுக்கு      பின்புறம்
                   பூசி    20 நிமிடம்  விட்டு   பார்க்கவும்.]
               *  20  நாட்கள்   or  30  நாட்க்களுக்கு  ஒரு  தடவை  செய்யலாம்.

Tuesday, May 28, 2013

Face Dark Patches [Treatment]

 கருமை  படர்வதைக் குறைப்பதற்கான்  சிகிச்சை









Pack  ஒரு முறை  :
  1.     உருளைக்கிழங்கு  துருவல் ‍‍‍‍‍_ 1\2  தேக்கரண்டி
  2.     கட்டித்தயிர்               _1/2தேக்கர்ண்டி
       இவை  இரண்டையும்  கலந்து  கருமை  உள்ள  இடங்களுக்கு  பூசி  மசாச் கொடுக்கவும்.  15 நிமிடத்திற்க்கு  பின்  துடைத்து  எடுக்கவும்.

Pack  இரண்டாவது  முறை :
  1.       காய்ந்த  பால் _ 1/2 கப்
  2.       துருவிய  அப்பிள்  _  1/2 கப்
         இவை  இரண்டையும்   கலந்து  முகத்தில்  இட்டு  15_20  நிமிடம்  கழித்து  துடைத்து  எடுக்கவும்.

Note  :  * ஒரு  நாளைக்கு  ஒரு  அப்பிள்  சாப்பிடுகிறதால்   உடல்   ஆரோக்கியம்  பேணப்படுவதோடு  நோய்  எதிர்ப்பு  சக்தி  வளர்ந்து  ஒளி  பெற்று  தோல்  நிறமும்  பளபளப்பும்  சிகப்பு  அழகு  கிடைக்கிறது.
    *  ஒரேஸ்  சாரினை  [செம்மஞ்சல்]  கிழமைக்கு   இரு  தடவைகள்  முகத்தில்  பூசி  காயக்காய   5 தடவைகள்  பூசி  10  நிமிடத்தால்  கழுவலாம்.

Monday, May 27, 2013

FACIL FOR DRY AND DULL SKIN

வறண்ட  மற்றும்  பாதிப்படைந்த  சருமத்திற்க்கு


  • Cleansing   Milk ஜ   Or  Face  Wash   Gel  ஜ   Or எதேனும்  ஒரு   Face   Wash ஜ  கொண்டு  முகத்தை  சுத்தம்  செய்யவும்.
  •  Steam  ஜ  பிடிக்கவும்.
  • Aromatic   Skin  Toner யும்   [எதாவது  மூலிகை   Toner ]   யும்  கலந்து  முகத்தில்  பூசி  காய்ந்ததும்  துடைத்து  எடுக்கவும்.
  • Black  Heads,   White   Heads  இருந்தால்  அதனை  அகற்றி  விடவும்.
  • எதாவது  விற்றமீன் _ E  Oil ,  Beauty  Skin  And   Almond   Moisturising  Oil     இவற்றை  பண்ணி  முகத்தில்  இட்டு  5  நிமிடம்  மசாச்  கொடுக்கவும்.
  • Sea  Weed    Pack  ஜ  முகத்தில்  பூசி  இந்த   Pack க்கு  மேலே  மெல்லிய  பஞ்சிலான   முகமூடி  போடவும்.  அந்த முகமூடிக்கு  மேல்   Bionic   Pack  ஜ   பூசி  20  நிமிடங்கள்  விடவும்.  பின்னர்  ஈரப்பஞ்சினால்  துடைத்து  எடுக்கவும்.
  • Sunscreen   Lotion   And   Almond   Moisturising    Lotion  ஜ   சேர்த்து  பூசி  விடவும்.

Saturday, May 25, 2013

சனிபகவான் கவசம்

01
கரு  நிறக்  காகம்  ஏறி காசினி  தன்னை  காக்கும்
ஒரு  பெரும்  கிரகமான ஒப்பற்ற  சனியே  உந்தன்
அருள்கேட்டு  வணங்குறேன். ஆதரித்து  எம்மை  காப்பாய்
பொருளோடு  பொன்னை  அள்ளி பூவுலகில்  எமக்கு  தராய்

02
ஏழரைச்சனியாய்  வந்தும் எட்டினில்  இடம்  பிடித்தும்
கோளாறு  நான்கில்  தந்தும் கொண்டதோர்  கண்ட  கத்தில்
ஏழினில்  நின்ற  போதும் இன்னல்கள்  தாரா  வண்ணம்
ஞாலத்தில்  எம்மை  காக்க நம்பியே  தொழுகின்றேன்  நான்

03
பன்னிரு  ராசி  கட்கும் பாரினில்  நன்மை  கிட்ட‌
எண்ணிய  எண்ணம்  எல்லாம் ஈடேறிவழிகள்  காட்ட‌
எண்னையில்  குளிக்கும்  நல்ல ஈசனே  உனைத்துதித்தேன்
புண்ணியம்  எனக்கு  தந்தே புகழ்  கூட்ட  வேண்டும்  நீயே

04
கருப்பினில்  ஆடை  ஏற்றாய் காக்த்தின்  ஏறி  நின்றாய்
இரும்பினை  உலோகமாக்கி எள்தனில்  பிரியம்  வைத்தாய்
அரும்பினால்  நீல  வண்ணம் அணிவித்தால்  மகிழ்ச்சி  கொள்வாய்
பெரும்  பொருள்   வழங்கும்  ஈசா பேரருள்  தருக  நீயே

05
சனியெனும்  கிழமை  கொண்டாய் சங்கடம்  விலக  வைப்பாய்
அனிதிகழ்  அனக்ஷ்சம்  பூசம் ஆன்றதோர்  உத்ரட்டாதி
இனிதே  உன்  விண்மீனாகும் எழில்  நீலா  மனைவி  யாவாள்
பணியாக  உனக்கு  ஆண்டு பத்தொன்போதென்று   சொல்வார்

 06
குளிகனை  மகனாய்  பெற்றாய் குறைகளை  அகல  வைப்பாய்
எழிலான  சூரியன்  உன் இனையற்ற  தந்தை  யாவார்
விழி  பார்த்து  பிடித்து  கொள்வாய் விநாயகர்  அனுமன்  தன்னை
தொழுதலோ  விலகிக்  கொள்வாய் துணையாகி  அருளை  தாராய்
 
07
அன்ன  தானத்தின்  மீது அளவிலா  பிரியம்  வைத்த‌
மன்னனே  சனியே  உன்னை மனதார  போற்றுகின்றோம்
உன்னையே  சரணடைந்தோம் உயர்வெல்லாம்  எமக்குத்  தந்தே
மன்னர்  போல்  வாழ்வதற்கே மணியான  வழிவகுப்பாய்

08
மந்தனாம்  காரி  நீலா மணியான  மகர  வாசா
தந்ததோர்  கவசம்  கேட்டே சனியென்னும்  எங்கள்  ஈசா
வந்திடும்  துயரம்  நீக்கு வாழ்வினை  வசந்தம்  ஆக்கு
எந்த  நாள்  வந்த  போதும் இனிய  நாள்  ஆக  மாற்று.

Thursday, May 16, 2013

GOLD FACIAL

 தேவையான  பொருட்கள்:
  • Face    Wash
  • Milky  Pack
  • Under   Eye  Gel
  • Papaya   Enzyme lotion
  • Firming   Gel
  • Gold   Gel
  • Beauty   pack
  • Almond   Nourishing
  • Almond    Sunscreen  Cream

         
       செய்முறை  :

  • Face   Wash -ஜ  கொண்டு  அதனுடன்       Rose   Water-ஜ  கலந்து  முகத்தில்  இட்டு  நிமிடங்கள்  மெதுவாக  மசாச்  செய்யவும். பின்னர்  ஈரப்பஞ்சினால்  துடைத்து  எடுக்கவும்.
  • Under  Eye   Gel-ஜ  கண்களை  சுற்றி  பூசவும்.  அதனை   நீக்காமல்  அப்படியே  விடவும்.  முகத்திற்க்கு     Milky   Pack ,   Papaya   Enzynelotion    இரண்டையும்  கலந்து  முகத்தில்  இடவும்.  [கண்களை  சுற்றி  போடத்  தேவையில்லை]  10 தொடக்கம்  15  நிமிடம்  வரை  அப்படியே  விடவும்.  பின்னர்  ஈரப்பஞ்சினால்  துடைத்து  விடவும்.

  • நுனி  விரல்களினால்  ஆனா  மசாச்  கொடுக்கவும். [2 நிமிடங்கள்] 


  • நீராவி பிடிக்கவும். [  Steam  ]

  •    Black   Heads,   White  Heads-ஜ  அகற்றவும்.  ஈரப்பஞ்சினால்  துடைக்கவும்.

  •   Firming   Gel-ஜ  முகத்தில்  ஈட்டு  10  நிமிடம்  மசாச்  கொடுக்க  வேண்டும்.  அதனை  அகற்றமலே   Gold   Gel-ஜ  ஒரு  விரலால்  எடுத்து  கண்கள்,  நெற்றி,  நாடி,  மூக்கு,  இவற்றில்  தடிப்பாக  பூசவும்.  வளைவு  முறையான  மசாச்  கொடுக்கவும்.  [ஒரு  விரலால்]  / [மிசின்  முலம்  கொடுக்கலாம். இந்த  மசாச்சினை   என்ற  அந்த  கருவியால்    Negative  ல்  விட்டு  1.5  தொடக்கம்  2  நிமிடம் வரை  விடவும். 2  நிமிடங்களுக்கு   மேல்  நீடிக்கக்கூடாது.   Positive    வாக  விட்டு  1  நிமிடமும்   மசாச்  கொடுக்கவும்.  N + P    இரண்டும்   சேர்ந்து  3  நிமிடத்துக்கு  மேல்  அதிகரிக்கக்கூடாது.]  பின்னர்  ஈரப்பஞ்சினால்  துடைத்து   எடுக்கவும்.


  • Beauty  Pack-ஜ  முகத்தில்  இட்டு  20  நிமிடத்திற்க்கு  பின்னர்  ஈரப்பஞ்சினால்  துடைத்து  எடுக்கவும்.

  • Almond  Nourishing  Cream-ஜ சிறிது  எடுத்து  முகத்தில்  இட்டு  10  நிமிடம்  மசாச்  கொடுக்கவும்.  பின்னர்  ஈரப்பஞ்சினால்  துடைத்து  எடுக்கவும்.  [Sunscreen Lotion- ஜ  பூசி  விடவும்.]


  Note :  வெய்யினால்  ஏற்படும்  தாக்கத்தை  குறைக்க‌



Wednesday, May 15, 2013

சருமத்தை வெண்மையாக்கும் சிகிச்சை- SKIN LIGHTENING TREATMENT!!

  • Turmeric  Cleanser   [மஞ்சல்] சிறிய மசாச் செய்யவும்.2 நிமிடத்தின் பிறகு ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
  • fairy lotion, Toner  இதனை முகத்தில் பூசி காய்ந்ததும் துடைத்து எடுக்கவும்.
  •  Serub முகத்தில் போடவும் [அடர்த்தியாக] மசாச்சை தவிர்லகவும். 5 நிமிடத்திலே மெல்லிய மசாச் கொடுக்கவும். பிம்பில்ஸ் இருந்தால் மசாச்சை தவிர்க்கவும்.10 நிமிடத்திலே ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
  • நீராவி [Steam] பிடிக்கவும்.[லேச வியர்க்கும் வரை]முகத்தை துடைத்தவுடனையே Black Heads, White Heads அகற்றவும். 
  • Milky Pack, Fairy Lotion  இரன்டையும்  Mix பண்ணி முகத்தில் Use பண்ணவும். கண்னை சுற்றி உட்பட பயன்படுத்தவும்.15 நிமிடத்தின் பின்னர் ஈரக் கையினால் மெதுவாக மசாச் கொடுக்கவும்.[5நிமிடம்] பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
  • Glossy Pack [Aroma] முகம் முழுவதும் பூசவும் [கண் வலயம் சேர்ந்த] 15 நிமிடம் கழித்து ஈரமான விரல்களால் 5 நிமிடம் மசாச் கொடுக்கவும். ஈரப்பஞ்சினால் துடைத்து எடுக்கவும்.
  • Sunsereen  Lotion அப்லை பண்ணி விடவும். Oil Skin  என்றால் கிறீமுடன் கலந்து பூசவும். Dry Skin என்றால் Almond Lotion [பதாம் கிறீம்] கலந்து பூசவும்.
Note; Shoulder, Hand  மசாச் செய்து விடவும்.

Tuesday, May 14, 2013

Facil Pressur Point

Facil செய்யும் போது மசாச் செய்தல் வேண்டும் ஒரு தடவை ஃபேசியல் செய்யும் போது 7 தடவை Pressur பண்ணுதல் வேண்டும் இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதோடு கண்களுக்கும்  மூலைக்கும் புத்துணர்ச்சி செய்கிறது.

Monday, May 13, 2013

'வாழ்வின் நிஜம்'..


அகந்தையை அகற்றினால் சொர்க்கம் நிச்சயம்

மிகப்பெரிய கோவில் ஒன்றில் பண்டிதர் ஒருவர் பல நாட்கள் புராண உபந்யாசம் செய்து கொண்டிருந்தார். படித்தவர்கள், பணக்காரர்கள் பலர் மனைவி மக்களுடன் காரிலும், வண்டிகளிலும் தவறாமல் வந்து புராணம் கேட்டனர்.


ஒரு ஆடு மேய்ப்பவனுக்கு புராணம் கேட்க ஆசை. அவன் படிப்பும், இல்லாதவன், சபையில் எல்லாருக்கும் சமமாக உட்காராமல் மூலையில் அமர்ந்து கதை கேட்டான். தினந்தோறும் சொற்பொழிவு நடந்தது.


கடைசி நாளன்று புராண உபன்யாசம் செய்தவர் சபையில் இருந்தவர்களைப் பார்த்து “ இவ்வளவு நாள் புராணம் கேட்டீர்களே ! உங்களில் யார் சொர்க்கத்திற்குப் போகிறீர்கள் ?" என்று கேட்டார். ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை. அப்போது ஆடு மேய்ப்பவன் மட்டும், நான் போனால் போவேன் என்று கூறினான்.


சபை ஆச்சரியப்பட்டது. பெரியவர் விளக்கம் அளிக்குமாறு ஆடுமேய்ப்பவனிடம் கேட்டார். அப்போது “நான்“ என்ற அகந்தை போனால் சொர்க்கம் போகமுடியும் என்றான் அவன்!

கடவுள் எங்கே இருக்கிறார்?

 சொல்கிறாய். இல்லையா?”
 “நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”
“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”
“ஆம்.”

“எ‎ன்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். த‎ன்னைக் காப்பாற்ற கடவுளிட‎ம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். 

ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பி‎ன் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் எ‎ன்று?”
(மாணவர் அமைதியாய் இருக்கிறார்)

“உ‎ன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”
 “ஆம் ஐயா..”

“சாத்தா‎ன் நல்லவரா?”
“‏இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தா‎ன் என்றால் சாத்தா‎ன் எங்கிருந்து வந்தார்?”
“கடவுளிடமிருந்துதா‎ன்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை ‏இருக்கின்றனவா?”
“ஆம்.”

“அப்படியெ‎ன்றால் அவற்றை உருவாக்கியது யார்?”
(மா‎ணவர் பதில் சொல்லவில்லை)

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம்‏ இருக்கிறது, மூட‎ நம்பிக்கைகள் இருக்கி‎ன்றன. ‏ ‏ இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”
“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புல‎ன்கள் இருக்கி‎‎ன்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தா‎ன் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்?”
…….
“ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”
“ஆம் ஐயா..”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் ‏ இல்லை’ என்று. ‏ இதற்கு நீ எ‎ன்ன பதில் சொல்லப் போகிறாய்?”
“ஒ‎ன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதா‎ன் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.
(‏இப்போது மாணவர் த‎ன் வாதத்தை ஆரம்பிக்கிறார்)
“ஐயா.. வெப்பம் அல்லது சூடு எ‎ன்ற ஒ‎ன்று உள்ளதா?”
“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர்‎ என்ற ஒ‎ன்றும் உள்ளதா?”
“நிச்சயமாக.”

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் எ‎ன்ற ஒ‎ன்று இல்லை.”
(வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.)

“ஐயா.. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் ‏ இருக்கின்றன. 

ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் எ‎ன்பது ஓர் ஆற்றல். குளிர் எ‎ன்பது வெப்பத்தி‎ற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் ‏எனும் ஆற்றலி‎ன் இல்லாமையே குளிர் எ‎ன்பது. (Absence of heat is the cold). “வெப்பம் ‏இல்லை” என்பதைத்தான்‎ குளிர் எ‎ன்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தா‎‎‎ன். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தா‎ன். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது.”

(குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை)

“சரி.. ‏ இருட்டென்றால் எ‎ன்னவெ‎ன்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒ‎ன்று உண்மையிலேயே ‏இருக்கிறதா?”
“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது.”

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. 
‏இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பி‎ன்‏ இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி எ‎ன்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தா‎ன் இருட்டு. அதை அளக்க முடியாது. ‏இல்லையா?”

“சரி தம்பி.. நீ எ‎ன்னதான் கூற வருகிறாய்?”
“ஐயா.. நா‎ன் கூறுகிறே‎‎ன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”
“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒ‎ன்று ‏இருந்தால் அதற்கு எதிரிடையான ஒ‎ன்றும் ‏இருக்கிறது எ‎ன்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை எ‎‎ன்ற ஒ‎ன்று உண்டு எ‎ன்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எ‎ப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எ‎ண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மி‎ன் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தா‎‎‎ன். மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்த‎ன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களி‎ன் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு எ‎ன்பதை வாழ்வதி‎ன் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற த‎ன்மையே இறப்பு எ‎ன்பதை அறிகிறீர்கள் இல்லை. ‏ ‏

“சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்கிறீர்களா?”
“”இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான்.” பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”
(பேராசிரியர் த‎ன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, பு‎ன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.)
“அப்படியெ‎ன்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ‘ஒருவகையா‎ன’ அனுமானம்தான். ‏ இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனித‎ன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை எ‎ன்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒ‎‎ன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், ‏ இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

(மாணவர்கள் சீட்டி‎ன் நுனிக்கே வந்து விடுகிறார்கள்)
“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”
(வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது)
“யாராவது பேராசிரியரி‎ன் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது ‏இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா‏? அத‎ன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் எ‎ன்ன சொல்கின்றன?”
“அப்படியெ‎ன்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுட‎ன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை எ‎ன்று.”

“மூளையே இல்லாத ‎நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”
 (மாணவரி‎ன் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரி‎ன் முகமோ வெளிறிப்போனது!)

 “நீ எனக்கு மூளை இருக்கிறதெ‎ன நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”
“அது தா‎ன் ஐயா.. இவ்வளவு நேரம் நா‎ன் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தி‎ன் பெயர்தான் நம்பிக்கை என்பது. 

‏ இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.” இவ்வாறாக, விவாதம் நிறைவுற்றது.!!

கேரட் அல்வா - தயாரிப்பது எப்படி?

தேவையான பொருள்கள்:
  • கேரட் துருவல் - 1 கப் (துருவிக் கொள்ளவும்)
  • அஸ்கா சர்க்கரை - 1 கப்
  • ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
  • காய்ச்சிய பால் - முக்கால் கப்
  • உப்பு - 1/4 சிட்டிகை
  • முந்திரி - 6 பருப்புகள்
  • திராட்சை - 6
  • உருக்கிய நெய் - 1/2 கப்
  • தண்ணீர் - 2 கப்
  • ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்

  செய்முறை: 

* கேரட் துருவலுடன் தண்ணீர் 2 கப் சேர்த்து அளவான தீயில் வேகவைக்கவும்.

* பாதி வெந்தவுடன் தண்ணீரை வடித்து கேரட் துருவலை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.

* ஆறியவுடன், அதை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

* கனமான உருளியில் பால், சர்க்கரை, கேரட் விழுது சேர்த்து, சர்க்கரை கரைந்தவுடன் கைவிடாமல் கிளறி, கெட்டியான சுருள் பதம் வருகையில் உருக்கிய நெய்யை அளவாக ஊற்றிக் கிளறுங்கள்.

* அல்வா பதம் வந்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, கலர், ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.  

பால் அல்வா செய்வது எப்படி!!!

தேவையான பொருள்கள்:
  • காய்ச்சிய பால் - 5 கப்
  • அஸ்கா சர்க்கரை - 1/4 கப்
  • எலுமிச்சம்பழச் சாறு - 1/2 ஸ்பூன்
  • உருக்கிய நெய் - 1/4 கப்
  • சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
  • ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்                
  • பன்னீர் - 1 ஸ்பூன்
  • கிஸ்மிஸ் பழம் -6


செய்முறை: 

* கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிறளவும்.

* பாலின் அளவு நான்கில் ஒரு பங்கு ஆனவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.

* பிறகு நெய்யை ஊற்றி, பாத்திரத்தின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும் பாலாடையையும் வழித்து பாலுக்குள்ளேயே போட்டு, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை 
 அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.

* சூடாகப் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்தும் பரிமாறலாம்.

யுவனின் 100வது பட ஆடியோ விழாவில் இளையராஜா- ஏ.ஆர்.ரகுமான்!


சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. ஏராளமான ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்ட அவர், இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பிரியாணி படத்தின் மூலம் 100 படங்களுக்கு இசையமைத்து விட்ட

பெருமை பெற்றுள்ளா.
அந்த வகையில் யுவனின் சினிமா கேரியரில் இது முக்கியமான படம் என்பதால், இப்படத்தின் ஆடியோ விழாவை பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளனர். முக்கியமாக, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோரையும் ஒரே மேடையில் தோன்ற பேசி வருகின்றனர்.
ஏ.ஆர்.ரகுமான் இளையராஜாவிடம் கீப்போர்டு பிளேயராக பணியாற்றிய காலகட்டத்தில், அப்போது சிறுவனாக இருந்த யுவன் அவருக்கு நல்ல பரிட்சயம். அதனால் யுவனின் வெற்றியில் ரகுமானும் சந்தோசமடையக்கூடியவர் என்பதால், இந்த விழாவில் அவர் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு கோடி கேட்ட சிவகார்த்திகேயனுக்கு ரூ 2 கோடி தரும் கோடம்பாக்கம்


லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சம்பளம் இப்போது கோடிகளில். போன பிரஸ் மீட் வரை நானா.. ஒரு கோடி சம்பளம் கேட்டேனா… என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த அவர், இப்போது ரூ 2 கோடி சம்பளம் பெறுகிறாராம். சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது. அவர் நடித்து அண்மையில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் ஆகிய படங்களின் வெற்றிதான் இதற்கெல்லாம் காரணம் என்பது சொல்லாமலே தெரியும் உண்மை. இப்போது அவர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் எஸ்.மதன் தயாரிக்கும் புதிய படத்திலும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இன்னொரு படத்திலும், லிங்குசாமி தயாரிக்கும் மற்றொரு படத்திலும் நடிக்க ஒப்ந்தமாகியிருக்கிறார்.
இந்த மூன்று படங்களில் நடிக்க சம்பளமாக தலா 2 கோடி ரூபாய் பேசப்பட்டு அட்வான்ஸும் கொடுத்துவிட்டார்களாம். து. மேலும் ‘எதிர் நீச்சல்’ படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், மீண்டும் தனுஷ் தயாரிக்கும் ஒரு புதிய படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இந்த நான்கு படங்களில் துரை செந்தில்குமார் இயக்கப் போகும் படத்திற்குதான் முதலில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது. இந்தப் படத்துக்கும் ரூ 2 கோடி சம்பளமாம். இந்தப் படங்களும் வெற்றி பெற்றால், அடுத்தடுத்த படங்களுக்கு சம்பளம் வேறு ரேஞ்ச் என்கிறது சிவகார்த்திகேயன் தரப்பு.

Text Widget

TAMILEELAM