Powered by Blogger.

Wednesday, August 7, 2013

விநாயகர் பெருங்கதை விரதம்



விநாயகர் பெருங்கதை விரதம்

விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம் எனவும் அழைப்பர்.

இந்த இருபத்தொரு நாட்களிலும் விநாயகருக்குத் திருமஞ்சன முதலியவைகளைச் சிறந்த முறையில் செய்வித்து ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு விதமாக இருபத்தொரு வகையான பணியாரங்களை நிவேதித்தல் வேண்டும். முதல் இருபது நாட்களிலும் ஒருபோது உண்டு, பிள்ளையார் கதையைப் பெரியோர்கள் சொல்லக் கேட்டுக்கொண்டு எப்போதும் தியானத்தில் இருப்பவர்களாக நாட்களைக் கழித்தல் வேண்டும். இறுதிநாள் மட்டும் உணவை விடுத்து மறுநாட்களையில் பாரணை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளுதல் மரவு. ஈழத்தில் உள்ள விநாயகர் ஆலயங்களில் இவ்விரத காலங்களில் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை, விநாயக புராணம் என்பவற்றைப் படனம் செய்யும் வழக்கம் நெடுங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது.

விரதத்திற்கான நியதிகள்
1.விரத ஆரம்ப நாளில் இருபத்தொரு இழைகள் கொண்ட காப்பை ஆண்கள்
   வலக்கையிலும் பெண்கள் இடக்கையிலும் அணிந்து கொள்ள வேண்டும்.
2.முதலிருபது தினங்களும் ஒரு பொழுது நண்பகலில் உணவு
    உண்ணல்,இரவில் பால்,பழம் உண்ணல்.
3.இறுதித் தினத்தில் உபவாசம் இருத்தல்.
4.நாள்தோறும்இளநீர்,கரும்பு,மோதகம்,அவல்,எள்ளுருண்டை 
   முதலானவற்றை நிவேதனம் செய்தல்.
5.பாரணத் தினத்தின் காலைப் பொழுதில் பவித்திரமாக காப்பை அவிழ்த்தல்.
 இவ்வாறு விரதத்தை அனுட்டிப்பதன் மூலம் விநாயகப்பெருமானின்                     அருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

 21 நாட்களும் ஒரு பொழுது உண்டு இறுதி நாளில் உபவாசம் இருந்து இளநீர் கரும்பு மோதகம் அவல் எள்ளுண்டை முதலானவற்றை நிவேதித்து சிறப்பு வழிபாடு செய்ய வேண்டும் 21 நாட்களும் பெருங்கதை எனப்பெறும் விநாயக புராணம் (பார்க்கவ புராணம் ) படிக்க வேண்டும் கேட்க வேண்டும் ( இந்த 21 நாட்களிலும் விநாயக கவசத்தை நாள் ஒன்றுக்கு 21முறை பாராயணம் செய்தால் நினைத்த காரியம் கைகூடும்).அடுத்த சஷநாள் ஏழை எளியவரோடு இருந்து உணவு உண்டு விதரத்தை நிறைவேற்ற வேண்டும்.


 



No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM