Powered by Blogger.

Tuesday, July 30, 2013

விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தி வரலாறு!

பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி'யாக நியமித்தார். அவருக்கு

அனிமா, மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார். கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே, வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும்' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று. ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பயபக்தியோடு விநாயக வழிபாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம்.


ஆவ‌ணி மா‌த‌ம் சு‌க்ல ப‌ட்ச சது‌‌ர்‌த்‌தி ‌தின‌த்‌தி‌ல் அ‌திகாலை‌யி‌ல் எழு‌ந்‌தி மூ‌‌ஷிக வாகனனை முழு மனதோடு ‌நினை‌த்து ‌‌நீராட வே‌ண்டு‌ம்‌. பூஜை அறை‌யி‌ல் சு‌த்தமான மன‌ப்பலகை வை‌த்து அத‌ன் ‌‌‌மீது கோல‌ம் போட வே‌ண்டு‌ம். அத‌ன் மே‌ல் தலைவாழை இலை ஒ‌ன்றை வட‌க்கு பா‌‌‌ர்‌த்து வை‌த்து அத‌ன் மேலே ‌‌ப‌ச்ச‌‌ரி‌சியை பர‌ப்‌பி வை‌க்க வே‌ண்டு‌ம்.

பிள்ளையார், விக்னேசுவரர், கணேசர், கணபதி, கணாதிபர், ஐங்கரன், ஏரம்பன், இலம்போதரர், குகாக்கிரசர், கந்தபூர்வசர், மூத்தோன், ஒற்றைமருப்பினன், மூஷிகவாகனன், வேழமுகன், கயமுகன், ஓங்காரன், பிரணவன் போன்ற இன்னும் பல நாமங்கள் விநாயகருக்கு வழக்கிலுள்ளன. இவற்றுள் 'விநாயகர்' என்பது 'மேலான தலைவர்' என அர்த்தப்படும். விமேலான: நாயகர் தலைவர் தனக்கு மேலாக ஒருவர் இல்லாதவர் எனப் பொருள்படும். அதுபோலவே 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும், 'ஐங்கரன்' என்றால் (தும்பிக்கையுடன் சேர்த்து) ஐந்து கரங்களை உடையவரெனவும்' அர்த்தப்படும். 'கணபதி' என்பது கணங்களுக்கு அதிபதி என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்தப் பெயர்களிலேயே பொதிந்துள்ளன.


விநாயக விரதங்கள்.

ஒவ்வோர் ஆண்டிலும் விநாயகருக்கான விரத நாட்கள் அனேகமாக சதுர்த்தித் திதியன்றே கூடுவதை அவதானிக்கலாம். சுக்கில பட்ச சதுர்த்தி என்றும் கிருஷ்ண பட்ச சதுர்த்தி என்றும் இரண்டு சதுர்த்தி விரத தினங்கள் மதாந்தம் சம்பவிக்கின்றன. சுக்கில பட்சச் சதுர்த்தியை 'சதுர்த்தி விரதம்' என்று கொள்வர். அவற்றுள்ளும் ஆடி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'நாக சதுர்த்தி' என்றும் ஆவணி மாதத்தில் வருகின்ற சுக்கில பட்சச் சதுர்த்தியை 'விநாயக சதுர்த்தி' என்றும் கைக்கொள்கின்றனர்.

மாதாந்தம் கிருஷ்ண பட்ஷத்தில் வருகின்ற சதுர்த்தியை 'சங்கடஹர சதுர்த்தி' என்பர். விநாயகரைத் துதிப்போரின் சங்கடங்களை அவர் நீக்கியருளுவார் என்பதனால் அத்தினத்தில் வருகின்ற விரதத்தை 'சங்கடஹர சதுர்த்தி விரதம்' என்கின்றனர். இருந்தும் ஆவணி மாதத்தில் வருகின்ற கிருஷ்ண பட்ஷச் சதுர்த்தியை 'சங்கடஹர விநாயக சதுர்த்தி' என்று வழங்குவர். ஆவணி மாதத்தில் வருகின்ற இரண்டு சதுர்த்தி விரதங்களும் முக்கியமானவை. எனினும் 'விநாயக சதுர்த்தி விரதமே அதிவிஷேடமானது. சுக்கில பட்ஷ சதுர்த்தியின் அதிபதியான 'தேவி' விநாயகரை வழிபட்டு மத்தியான நேரத்தில் தரிசனம் பெற்று உய்ந்தாள் என்றும், அந்நாளில், அந்நேரத்தில் விநாயரைக் குறித்து விரதம் அனுஷ்டித்து வழிபடுபவர்களுக்கு விநாயகரின் அருளும், சுகபோக சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறுவது நிச்சயம் என்றும் கூறுவர்.
விநாயக சதுர்த்தியன்று 21 வகையான இலைகளைக்கொண்டு ஜபத்திரகள்ஸ அர்ச்சிப்பது சிறந்தது எனப்படுகின்றது. வகைக்கு 21 பதிரங்களைத் தேர்ந்துகொள்வது நலம்பல பயக்கும் என்பர். அவ்வாறான பத்திரங்களும், அவற்றைக்கொண்டு அர்ச்சிப்பதனால் அடையக்கூடிய பலாபலன்கள் பற்றிய விபரங்களும் வருமாறு:

1. முல்லை இலை பலன்: அறம் வளரும்

2. கரிசலாங்கண்ணி இலை பலன்: இல்வாழ்க்கைக்குத் தேவையான பொருள்
    சேரும்.

3. வில்வம் இலை பலன்: இன்பம். ஜவிரும்பியவை அனைத்தும் கிடைக்கும்.ஸ

4. அறுகம்புல் பலன்: அனைத்து சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
     [ஜ21 அறுகம் புற்களைக் கொண்டு அர்ச்சிப்பது அதி விசேடமானதுஸ]

5. இலந்தை இலை பலன்: கல்வியில் மேன்மையை அடையலாம்.

6. ஊமத்தை இலை பலன்: பெருந்தன்மை கைவரப்பெறும்.

7. வன்னி இலை பலன்: பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள்
     கிடைக்கப்பெறும்.8. நாயுருவி பலன்: முகப் பொலிவும், அழகும் கூடும்.

9. கண்டங்கத்தரி பலன்: வீரமும், தைரியமும் கிடைக்கப்பெறும்.

10. அரளி இலை பலன்: எந்த முயற்சியிலும் வெற்றி கிட்டும்.

11. எருக்கம் இலை பலன்: கருவிலுள்ள சிசுவுக்கு பாதுக்காப்புக் கிட்டும்.

 12.  மருதம் இலை பலன்: மகப்பேறு கிட்டும்.

13. விஷ்ணுகிராந்தி இலை பலன்: நுண்ணிவு கைவரப்பெறும்.

14. மாதுளை இலை பலன்: பெரும் புகழும், நற்பெயரும் கிட்டும்.

15. தேவதாரு இலை பலன்: எதையும் தாங்கும் மனோ தைரியம் கிட்டும்.

16. மருக்கொழுந்து இலை பலன்: இல்லற சுகம் கிடைக்கப்பெறும்.

17. அரசம் இலை பலன்: உயர்பதவியும், பதவியால் கீர்த்தியும் கிட்டும்.

18.ஜாதிமல்லி இலை பலன்: சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம  
     கிடைக்கப்பெறும். 

 19. தாழம் இலை பலன்: செல்வச் செழிப்புக் கிடைக்கப்பெறும்.

20. அகத்தி இலை பலன்: கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

21. தவனம் ஜகர்ப்பூரஸ இலை பலன்: நல்ல கணவன் மனைவி
      அமையப்பெறும்

. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்பூச்சியா, மியன்மார் மொங்கோலியா, தீபெத்து ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக்கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழைமை வாய்ந்தவையென ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.



நாமம் பல தத்துவம் ஒன்று!

வரசித்தி விநாயகர், இஷ்டசித்தி விநாயகர், விக்ன நிவாரண கணபதி, வல்லப விநாயகர், சித்திபுத்தி விநாயகர் என்றெல்லாம் பல பெயர்கள் விளங்கினாலும் விநாயகரின் தத்துவம் ஒன்றே. ஈசன் மகனான கணபதியைத் துதித்த பின்பே எந்தச் செயலையும் தொடங்குகிறோம். கேட்ட வரம் தரும் பிள்ளைக் குணம் கொண்டு, என்றும் எவர்க்கும் பிள்ளையாகத் திகழ்வதால் பிள்ளையாராகினார் அந்த கணேசன்.

vinayagar sathurthi

இவ்விழா கொண்டாடப் படுவதற்குப் பின்னணியாக ஸ்காந்த புராணத்தில் ஒரு கதை சொல்லப்படுகிறது.

இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை!

வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து, எருக்கம் பூ அணிவித்து, அருகம்புல், செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம். ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை, திராட்சை, நாவல், விளாம்பழம், கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம். அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம்.

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா!

என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம். மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும், சிறு பூஜை செய்து, நல்ல நேரம் பார்த்து, பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ, குளத்திலோ, ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம்.

இவ்வாறு ஆண்டுதோறும் நாடெங்கும், உலகெங்கும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.



Saturday, July 27, 2013

"சங்கடஹர சதுர்த்தி" விரதம்


"சங்கடஹர சதுர்த்தி" விரதம்

விநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம். ஒவ்வொரு மாதமும் வரும் "சங்கடஹர சதுர்த்தி" நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும். "ஹர" என்ற சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தித் திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும்.



ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை கடைப்பிடிக்கத் துவங்க வேண்டும். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர். 
விரதத்தின் பலன்கள்

இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரும் பகுதி குறையும்.

விரதம் இருப்பது எப்படி?

சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும்.மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய,

"ஓம் தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்"


எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.






சதுர்த்தியின் மகிமை :

சங்கடஹர சதுர்த்தியின் மகிமையை முருகப் பெருமான் முனிவர்க்கு எடுத்துரைக்கிறார் ஸ்காந்தத்தில். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்தது சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும். காட்டில் தருமபுத்திரர் இவ்விரதத்தை மேற்கொண்டார். பாண்டவர்க்கு இவ்விரதத்தை உபதேசித்தவர் கண்ணபிரான். முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார். பார்வதி ! ஆண்டுக்காலம் இவ்விரதத்தை மேற்கொண்டு தன் பதியை அடைந்தாள். இந்திரன், சிவன், இராவணன் போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர். அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.





Friday, July 26, 2013

காதல் என்றால் என்ன? எது உண்மையான காதல்?

[ உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே.
இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.

முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே! ]

காதல் என்றால் என்ன?  


எதிர்பாலினர் மீது அன்பு, ஆசை கலந்து இளமையில் உருவாகும் ஈர்பின் பெயர் காதல்!’ - இதை அறிவியல்பூர்வமாக பார்த்தால் `காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். `காதல் என்பது அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடு’ என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள்!

காதல் செய்யும் மனிதர்களில் சுமார் பத்து சதவீதம் பேர்கூட திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதே நிதர்சன உண்மை! சுமார் 60 சதவீத காதல், திருமணம் என்ற பேச்சினை எட்டும் முன்னரே கலைந்து போய் விடுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இருவருமே முதன்முறையாக காதலில் விழும்போது அவசரபட்டு விடுவதுதான். பின்னர் இது காதல் இல்லை. நம் வாழ்க்கைக்கு இது சரிபடாது என்று பிரிந்து விடுகின்றனர்.

பருவ மாற்றம் காரணமாக இரண்டுங்கெட்டான் பருவத்தில் எதிர்பாலினத்தவரை பார்த்ததும் ஈர்ப்பு உண்டாகிறது. அதை காதல் என்று தவறாக நினைத்து விடுகிறார்கள். அது வெறும் இனக்கவர்ச்சி. ஆகவே திருமணத்திற்குப்பின் கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஈர்ப்புத்தான் உண்மையான காதல் என்று தாளாரமாகச் சொல்லலாம்.

காமம் என்பதில் காதல் இருக்க வேண்டிய அவசியமில்லை. காமம் என்பது காதல் ஆகாது. ஆனால் காதலில் காமம் என்பது ஒரு சிறு பகுதி மட்டுமே. அது ஒரு சிலருக்கு பெரும்பகுதியாகவும், சிலருக்கு முழு பகுதியாகவும் அமையலாம். திருமணத்திற்குமுன் ஏற்படும் காதல் பெரும்பாலும் காமத்தை நோக்கியே நகரும். இல்லையென்று சிலர் மறுத்தாலும் உண்மை அதுதான் என்பது எதார்த்தம்.

ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருந்தால் மூன்றவதாக (அவர்களைக்கெடுப்பதற்காக) ஷைத்தான் அங்கு நிச்சயம் இருப்பான் என்னும் இஸ்லாமிய கண்ணோட்டம் மிகவும் சரியானதே என்பதை விஞ்ஞான ஆய்வுகளும் நிரூபிக்கின்றன.
ஒரு ஆணும் பெண்ணும் பேசும்போது அவர்களுக்குள்ள இடைவெளியைப்பொருத்து அவர்கள் கெடுவதற்குள்ள வாய்ப்பைப்பற்றி குறிப்பிடும்போது, ஒரு அடி இடைவெளிக்குள் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் நான்கு முறை அருகருகே நின்று பேசினால் கெடுவதற்கான வாய்ப்பு மிக அதிகம் என்கிறார்கள்.
ஆகவே அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை போன்ற காதலே உன்னதமானது. இந்த உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!

திருமணத்துக்குமுன் காதலா...


கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அல்லது வேலை பார்க்கும் இடங்களில் தன்னுடன் படிக்கும், வேலை பார்க்கும் ஆண்கள் பெண்களுடனும், பெண்கள் ஆண்களுடனும் தீவிர நட்புடன் பழகுவதுண்டு. இந்த நட்பில் நல்ல நம்பிக்கை இருக்கும். இதில் எல்லோருக்கும் காமம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஒரு சிலரிடையே மட்டும் இருக்கலாம். பெரும்பாலானவர்களுக்கு அன்பு, நட்பு, அளவுகடந்த பாசம் போன்றவற்றிற்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியாமலே எல்லாவற்றைம் காதல் என்ற பெயரில் போட்டுக் குழப்பிக்கொள்கிறார்கள்.
குடும்பத்தை பற்றி அக்கறை இல்லாமல் சிலர், முழுக்க முழுக்க காதலையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். எதிர்கால வாழ்வு பற்றிய எவ்வித பொறுப்பும் இருக்காது. அதனால் இதுவும் உண்மையான காதலாக இருக்க முடியாது. ஆனால் வெளிலகிற்கு இவர்கள் தீவிர காதலர்கள் போல் தோன்றுவார்கள்.
பொழுதுபோக்கிற்காக பலர் காதலிப்பது உண்டு. கல்லூரி மற்றும் தாம் பணியாற்றும் இடங்களில் தன்னை பற்றி மற்றவர்கள் பெருமையாக நினைக்க வேண்டும் அல்லது பேச வேண்டும் என்பதற்காக யாரையாவது காதலித்துக்கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு காமம்தான் அடிப்படை. இவர்களுக்குள் ஓரளவுதான் நம்பிக்கை இருக்கும். ஆனால் கொஞ்சம்கூட பொறுப்பே இருக்காது. ஆனால் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றுவார்கள். பலர் முன்னிலையில் தீவிரமாக காதலிப்பது போல் நடிப்பார்கள். இதை தேறாத காதல் என்று கூறிவிடலாம்.
சினிமா நட்சத்திரங்கள் மீது சிலருக்கு காதல் ஏற்படும். சிலர், தனது காதலை சொல்லாமலேயே, தான் மட்டுமே தனியே காதலித்து ஒருதலையாக அலைந்து கொண்டிருப்பார்கள். சிலர் வயது வித்தியாசமின்றி காதலிப்பார்கள். இவையெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராத காதல்கள். இதை மூடத்தனமான காதல் என்றும் பொருந்தாக் காதல் என்றும் சொல்லலாம். ஆனால் முரட்டுத்தனமான நம்பிக்கையும், குருட்டுத் தனமான பொறுப்பும் கொண்டிருப்பார்கள். டீன்ஏஜ் பருவத்தில் உடலும், மனமும் புதுமையைத் தேடும் ஏக்கத்தில் இருக்கும். கண்ணுக்கு அழகாக இருப்பவர்கள் அல்லது தைரியமாக முன்வந்து பேசுபவர்களை மனது விரும்பும். அதை காதல் என்று பெரும்பாலானவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். எதிர்பாலினரின் உருவம் தவிர வேறு எதைம் அறியாமல் காதலில் விழும்போது அங்கே காமம் மட்டுமே இருக்கும்.
இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும். காமத்திற்கும், காதலுக்கும் பெருமளவு தொடர்பில்லை. காமம்தான் காதல் என்று சிலர் சொல்வது அவர்களின் அறியாமையே. இருவரும் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்து கொள்வதே இயல்பான காதலின் ஆணிவேர். காதலில் விழுந்த பிறகு, ஒரு ஆணுக்கு, தாம் நேசிக்கும் பெண்தான் உலகிலேயே அழகியாகத் தெரிவாள். (அது உங்கள் மனைவியாக இருக்கட்டுமே) பிறரது விமர்சனங்களை பற்றி கண்டு கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ மாட்டார்கள். அதுபோலவே ஓர் ஆணின் புற அழகை பார்த்தே பெண்கள் காதலுக்குரியவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் அந்த அழகு அவர்களுக்கு பிடித்திருக்கும் அவ்வளவுதான். இவையத்தனையும் போலியான காதல்.

உண்மையான காதல்


உண்மையான காதல் என்பது கணவன் மனைவிக்குள் இருப்பது, இருக்க வேண்டியது. உங்கள் உண்மையான காதலி உங்கள் மனையாகவே இருக்கட்டும். ஆகவே மீண்டும் மீண்டும் நினைவு படுத்துகிறோம்; ''உன்னதமான காதலை மனைவிமேல் கொள்வதுதான் நூற்றுக்கு நூறு சரியான செயலாக இருக்கும். அதற்கு தகுதியுடையவளும் அவளே. காரணம் உங்களுக்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு ஜீவன் அவளே. இறைவன் படைத்த மனிதப்படைப்பில் முதல் உறவே கணவன் மனைவி உறவுதான்.முதல் மனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாமும் அவருக்குத்துணையாக இறைவன் படைத்ததும் அவர்களது மனைவியான ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களைத்தானே!''

நிஜமாகவே ஆன்மீகம் என்றால் என்ன..?

ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் இல்லாமல், அடுத்தவருக்கு நல்லது செய்யாவிட்டாலும், கெடுதல் செய்யாமல் மனசாட்சிக்கு பயந்து வாழ்வது ஒருவகை ஆன்மீகம்.
அடுத்ததாக, பல மணி நேரம் வேறு பல சிந்தனையுடன் பூஜை செய்யாமல்,   இறைவனை ஒரு நிமிடம் வணங்கினாலும் எந்தவித சிந்தனையுமின்றி ஆத்மார்த்தமாக வணங்கி, எனக்கு உன்னை தவிர வேறு யாரும் தெரியாது, உன்னை தவிர வேறு யாரும் கிடையாது அனைத்தும் நீயாக இருக்கிறாய், இந்த உடலை நீயே வழிநடத்தி செல், என இறைவனிடம் சரணடைந்து விட்டு
நமது கடமைகளை மிகச்சரியானதாக செய்வது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.
நான் தினமும் நான்கு முறை குளிக்கிறேன். ஆறு முறை சுவாமி கும்பிடுகிறேன். ஆனால், இறைவன் என்னை கண்திறந்து பார்க்க மாட்டேன் என்கிறார், என்றெல்லாம் நிறைய பேர் குறைபட்டுக்கொள்கின்றனர். ஆனால், நமக்கு ஏற்படும் நன்மைகளுக்கும், தீமைகளுக்கும் நாமே பொறுப்பு. அனைவரிடமும் அன்பாக பேசுதல், அனைவருக்கும் நன்மை செய்தல், அனைவரையும் மரியாதையுடன் நடத்துதல், எதற்குமே ஆசைப்படாமல் இருத்தல், இது ஒரு வகை ஆன்மீக வாழ்க்கை.  நமது வலது கையில் செயல் திறமை உள்ளது, அதை மிகச் சரியாக செய்து உண்மையாக வாழ்ந்தால், இடது கையில் வெற்றி தானாகவே வந்து சேரும்.
இறைவனுக்கு நீங்கள் பிரசாதம் செய்து, படையலிட்டு, மிகப்பிரமாண்டமான பூஜை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அதை அவன் விரும்புவதும் இல்லை. அவன் விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது தான் உண்மையான பக்தி. இறைவனுக்கு நம் உள்ளத்தின் ஒரு சிறு ஓரத்தில் உண்மையான பக்தியை வைத்து, சதா சர்வ காலமும் அவனை நினைத்து, எந்த செயல் செய்தாலும், அது அவனால் தான் செய்யப்படுகிறது, என்ற நினைப்புடன் செய்து, அந்த செயலின் பலனை அவனுக்கு சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சகட்ட ஆன்மீகம்.


Saturday, July 20, 2013

கவிஞர்.கண்ணதாசன் தன்னைப்பற்றி எழுதிகொண்ட சுய விமர்சனம்...

கண்ணதாசன் நினைவலைகள் :

தன்னைத் தானே விமர்சித்துக் கொள்வது எத்துணை பேருக்கு சாத்தியப்படும். ஒரு நிலைக் கண்ணாடி முன் நம்மை பார்த்தே நாம் பேசியது உண்டா?. சிந்தித்தது உண்டா?இக்கட்டுரையை அவசர கதியில் படிக்க முடியாதவர்கள் சேமித்து வைத்து ஓய்வான சமயத்தில் படிக்கலாம். [ click on this Link இங்கு சொடுக்கவும் ]



கவிஞர்.கண்ணதாசன் தன்னைப்பற்றி எழுதிகொண்ட சுய விமர்சனம் இதோ...

வனது வாழ்க்கை அதிசயமானதுதான்.  எந்த ஒரு சராசரி மனிதனும் இப்படிப் பட்ட வேடிக்கையான வாழ்க்கையை மேற்கொள்ள மாட்டான்.  அவசரத்தில் காரியம் செய்து, சாவகாசத்தில் சங்கடப் படுவது அவனது இயற்கையான சுபாவம்.

இந்த வாரம் அவனை நான் சந்தித்தபோது, அவனுக்காக இரக்கப்பட்டேன். நரகம், சொர்க்கத்தை உணரத் தெரிந்த அவனுக்கு, அதைத் தேர்ந்தெடுக்க மட்டும் தெரிந்திருந்தால், இவ்வளவு நீண்ட கால வாழ்க்கையில் எவ்வளவோ அற்புதங்களை அவன் சாதித்திருக்க முடியும்.

தவறுகளின் மீது நின்று கொண்டே அவற்றை மறந்து விட அவன் முயன்றான்.  சில நேரங்களில் நியாயம் கற்பிக்கவும் முயன்றான். அதனால் அவன் நெஞ்சு அழும்போதே, வாய் சிரித்துக் கொண்டிருந்தது.

பரமஹம்ஸர் சொன்னதைப் போல பயனற்ற வேலைகளில் ஆசையோடு ஈடுபட்டுப் பொழுதைச் செலவழித்தான். பரமஹம்ஸரின் கதை இதுதான் :

ஆறுமாதம் சிரமப்பட்டு ஒரு சீடன் நீரில் நடக்கக் கற்றுக் கொண்டானாம். கங்கையில் நடந்து அவன் கரையேறியதும், பகவான் அவனைப் பார்த்து அனுதாபத்தோடு, ‘நாலணா கொடுத்தால் ஓர் ஓடக்காரன் இந்த வேலையைச் செய்து விடுவானே! இதற்காக இவ்வளவு காலத்தை வீணாக்கி விட்டாயே! என்றாராம்.

வாழும் காலம் மிகவும் குறுகியது. செயலற்ற காலம் ஒன்று வரக் கூடும். இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு மணி நேரத்தையும் பயனுள்ளதாக்க வேண்டும்.

இவையெல்லாம் அவனுக்குத் தெரியாதவையல்ல. ஆனால் நிரந்தரமாக விளையாடப் போகிறவன் போலவே வாழந்து பார்த்தான்.

அவனது அரசியல் வேடிக்கையானது. அவனது தேர்வுகள் சிரிப்புக் கிடமானவை. கடந்த முப்பதாண்டுகளாக ஒவ்வொன்றிலிருந்தும் விடுபடுவதாக நினைத்து, மேலும் மேலும் அவற்றிலேயே சிக்கிக் கொண்டான். இப்போது அஸ்தமன சூரியன் கிழக்கு வானத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடுகிறது.

தான் பசுமையாக இருந்தபோது காய்த்துக் குலுங்கிய காலங்களை எண்ணிப் பார்க்கிறது. கண்ணாடியில் பார்த்தால் உருவம் இப்போது அழகாக இருக்கிறது. உள்ளம்தான் தனது பரந்த மைதானத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்து விற்று விட்டது.

ஏக்கர் கணக்கில் இருந்த நிலம் கிரவுண்ட் கணக்கிலாகி, இப்போது செண்டுக் கணக்கில் ஆகி இருப்பது போன்ற ஒரு மயக்கம். 
ஆர்ப்பாட்டங்களில் இருந்து ஒதுங்கிவிட்டதாலே, பெரிய கண்டங்களில் இருந்து தப்பியாகி விட்டது. ஆனாலும் மெய் சிலிர்க்கக்கூடிய உற்சாகம் மீண்டும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆற்றங்கரைகளில் துள்ளிக் குதித்து, பசுமையான மலைகளின் காற்றில் உலாவி, குற்றாலத்து அருவியிலே கிருஷ்ணா !, கிருஷ்ணா ! என்று குளித்து, ‘வாழ்க்கை அற்புதமானது எண்றெண்ணிய மனது, பட்டியில் அடைபட்ட ஆட்டுக் குட்டி போல் சுற்றிச் சுற்றி வருகிறது.

பாம்புக்குப் பிடாரனின் கூடை வசதியாக இருநதாலும், அது வாழந்த காடுபோல் ஆகுமா?

அழகான மாளிகையின் தொட்டியில் எவ்வளவுதான் உணவுப் பொருட்கள் விழட்டுமே, ஆற்றில் கிடப்பது போன்ற சுகம் மீனுக்கு வருமா?

ரத்ததின் வெள்ளோட்டம் குறையக் குறைய, அந்த நாள் ஞாபகம் நெஞ்சைச் சுடுகிறது.

நான் அவனைச் சந்தித்தபோது, சிரித்துக் கொண்டே அழுதான்; அழுதுகொண்டே சிரித்தான். பாவம்! இப்போது மனிதன் மாறிவிட்டான்.

ஒரு சுகமான இடைக்காலமே இப்போது அவன் வாழ வேண்டிய அவசியத்துக்குக் காரணமாகிறது. இல்லையென்றால், ராஜாமாதிரி வாழ்ந்தவன், சந்நியாசி மாதிரி வாழக்கூடாது என்ற கொள்கை அவனுக்கு உண்டு.

‘அதிசயங்கள் நிகழ்த்திய பெருமையோடு ஆவி பிரிந்து விடவேண்டும்.” என்பான், ‘மாரடைப்பால் மரணம் என்பது கடவுள் கொடுக்கும் வரம் ‘ என்பான்.

அவனது நிறம் இன்னும் பசுமையாகவே இருக்கிறது. அவனது கற்பனை மகாநதியில் இன்னும் வெள்ளம் நுங்கும் நுரையுமாக பொங்கியே வருகிறது.

ஆத்ம ராகத்தில் மெய்சிலிர்க்க, இரண்டு கைகளையும் பின்னுக்குக் கட்டியபடி முன்னும் பின்னும் உலாவும் போது வானம் கீழே இறங்கி அவன் கால்களை முத்தமிடுகிறது. 
அவனுக்கு உலகத்தில் எதுவுமே பெரிதல்ல. சம்பாதிக்கத் தெரிந்தவன்; பத்திரப்படுத்தத் தெரியாதவன். சேமிப்பு இல்லாத காரணத்தால், பல நேரங்களில் கண்ணீரையே எண்ணிப் பெட்டியில் வைக்க வேண்டியதாயிற்று.

முப்பது வருட முட்டாள்தனத்தில் அவன் சேமித்த சொத்துக்கள், அவனது எழுத்துக்களே!

அவையும் இல்லாமற் போயிருக்குமானால், பூமியில் முளைத்து நிற்கும் தூங்குமூஞ்சிமரங்களில் அவனும் ஒன்றாகி இருந்திருப்பான்.

எப்போது தன் மதத்துக்குச் சம்பந்தமில்லாத ஒன்றில் தலையிட்டானோ, அப்போதே அவனது உற்சாகம் குறையத் தலைப்பட்டது. இது ஒருவகையில் தெய்வத்தின் பரிசே! 
ஆயிரம் இருக்கட்டும். அவனது வாழ்க்கை வரலாறு ஓர் அற்புதமான பெருங்கதை. தனது காதல் கதைகளில் தன்னை நேசித்த பெண்களையும், தன்னிடம் அன்பு செலுத்திய உள்ளங்களையும் அவன் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறான்.

இவ்வளவு நாடகத் திருப்பங்கள் வேறு யாருடைய வாழ்க்கையிலும் நிகழ்ந்திருக்க முடியாது.

இன்றைய இளைஞர் சமுதாயம் முழுமைக்கும் எப்படி வாழக் கூடாது என்று போதிக்க அவனுக்குச் சக்தி உண்டு.

கள்ளம் கபடமற்ற அந்த வாழ்க்கையில் கங்கையின் புனிதமும் இருக்கிறது. வைகையின் வறண்ட தன்மையும் இருக்கிறது. 
கடந்த ஜூன் இருபத்து நான்காம் நாள், ஐம்பத்து நான்கு வயதை எட்டிவிட்ட அந்த அதிசய மனிதனைப் பார்த்தபோது அவனது ஆதங்கங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் கடந்து, கண்களில் பரவி நின்ற தெளிவையே என்னால் காண முடிந்தது.

அவனுக்கு முதுமை வரவில்லை என்பதுபோல், அவனது உருவம் இருந்தது. தத்துவங்களுக்குள் சிக்கிக் கொண்டிருக்கும் அவனிடம் இருந்து விடைபெற என்னால் முடியவில்லை...காரணம் இது என் சுய தரிசனம்.

(ஒருகாலத்தில் குமுதத்தில் வெளியான கட்டுரைகளில் ஒன்று “சந்தித்தேன் சிந்திதேன்’ -கவிஞர்.கண்ணதாசன் நூல் அவர் மறைவுக்குப் பின் வெளியான ஆண்டு:1982)

Text Widget

TAMILEELAM